ஆசிரியர் தேர்வு வாரியப் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
- Web feathers
- Oct 12, 2021
- 1 min read
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-2021-ஆம் ஆண்டுக்கான பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) மூலம் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களில் சேர கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் இணைய வாயிலாக பெறப்பட்டு வருகிறது.
எனினும் தமிழ் வழியில் பயின்றோருக்கான சான்றிதழ் சார்ந்து மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாலும், பல்வேறு விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இணைய வழியில் விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 17.10.2021 என நிர்ணயிக்கப்பட்டதிலிருந்து 31.10.2021 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பதிவு: தினத்தந்தி (அக்டோபர் 11, 2021)
Comments