பிரதமர் மோடியுடன், மத்திய இணை மந்திரி எல். முருகன் சந்திப்பு
- Web feathers
- Oct 4, 2021
- 1 min read
Updated: Oct 6, 2021
அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவை இடைத்தோதலில் மத்திய பிரதேசத்திலிருந்து எல்.முருகன் எம்.பி. ஆகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். போட்டியின்றி தேர்வானதை அடுத்து, கடந்த 1-ம் தேதி எம்.பியாக எல்.முருகன் பதவியேற்றுக்கொண்டார். எல்.முருகனுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்திலிருந்து எல்.முருகன் எம்.பி. ஆக தேர்வான நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் மத்திய இணை மந்திரி எல். முருகன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது பிரதமருக்கு எல் முருகன் பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசாக திருக்குறள் புத்தகத்தை வழங்கினார்.
பதிவு: தினத்தந்தி
Comentarios