ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் #ஒத்த_ஓட்டு_பாஜக என்ற ஹேஸ்டேக்கோடு ரசிகர் பங்கேற்பு
- Web feathers
- Oct 15, 2021
- 1 min read
ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் ரசிகர் ஒருவர் #ஒத்த_ஓட்டு_பாஜக என்ற ஹேஸ்டேக் பதாகையோடு பங்கேற்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுடன், ஏனைய மாவட்டங்களில் காலியாக இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சி 9ஆவது வார்டு உறுப்பினருக்கான பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட பாஜக வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக் ஒரே ஒரு வாக்கை மட்டுமே பெற்றார்.
இந்தநிலையில் இன்று ஐபிஎல் சீசனின் சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் இறுதிப் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணிகள் மோதும் இப்போட்டியில் ரசிகர் ஒருவர் #ஒத்த_ஓட்டு_பாஜக என்ற ஹேஸ்டேக் பதாகையோடு பங்கேற்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
Comments