புதுச்சேரி தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு பட்டியலை வெளியிட்டது
- Web feathers
- Oct 9, 2021
- 1 min read
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு பட்டியலை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மாதம் 22 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அட்டவணையை வெளியிடப்பட்டது. அதில் பட்டியலினத்தவர்களுக்கு தொகுதி ஒதுக்கீடு சரிவர செய்யப்படவில்லை என வழக்கு தொடரப்பட்ட நிலையில், தவறுகளை சரி செய்து 5் நாட்களில் மறு அட்டவணை வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 5 ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் புதிய இடஒதுக்கீடு பட்டியலை புதுச்சேரி தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டது. மேலும் கடந்த மாதம் 22 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பாணை திரும்பப் பெறப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையர் தாமஸ் அறிவித்துள்ளார். புதிய தேர்தல் அட்டவணை அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் ரத்தாகின.
Comments