top of page

ஒரு சதவிகித வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டோம் - ஓ.பன்னீர்செல்வம்

  • Writer: Web feathers
    Web feathers
  • Oct 4, 2021
  • 1 min read

Updated: Oct 6, 2021


தமிழ்நாடு தேர்தல் ஆணையம், விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்துள்ள நிலையில் தேர்தல் பரப்புரையை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன.

இந்நிலையில் அதிமுக சார்பில் விழுப்புரத்தில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது, ''எனக்கு முன்னால் பேசிய சி.வி.சண்முகம் சொன்னார். சிலபல வியூகங்கள் காரணமாகத்தான் நாம் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டோம். உண்மைதான் சில வியூகங்கள் காரணமாகத்தான் நாம் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டோம். அரசைப் பற்றி எந்தக் குறையுமில்லை, குற்றமும் இல்லை. நிறைவாகத்தான் நமது அரசு இருந்தது. நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற நிலைதான் இருந்தது. ஒரு சதவிகித வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டோம்'' என்றார்.

பதிவு; நக்கீரன்

Comments


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by Web feathers | வலை சிறகுகள். Proudly created with Wix.com

bottom of page