அ.தி.மு.க.வின் பொன்விழாவை சிறப்பாக கொண்டாடுவது சம்பந்தமாக அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை
- Web feathers
- Oct 11, 2021
- 1 min read
ஆலோசனை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் போற்றி வளர்க்கப்பட்டு, பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை படைத்திட்ட அ.தி.மு.க. வருகிற 17-ந்தேதி அன்று பொன்விழா காண இருக்கிறது.

ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை இன்று நடைபெற்றது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
இந்த கூட்டத்தில் புதிய அவை தலைவரை தேர்ந்தெடுப்பது மற்றும் அ.தி.மு.க. பொன்விழாவை கொண்டாடுவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.
அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் போற்றி வளர்க்கப்பட்டு, பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளை படைத்திட்ட அ.தி.மு.க. வருகிற 17-ந்தேதி அன்று பொன்விழா காண இருக்கிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க.வின் பொன்விழாவை சிறப்பாக கொண்டாடுவது சம்பந்தமாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமைக் கழகத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக வழிகாட்டு குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கழகத்தின் பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடுவது சம்பந்தமாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் கழகத்தின் பொன்விழா ஆண்டை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப்பின் பற்றியும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும், தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பதிவு : மாலை மலர்
Commentaires