top of page

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

  • Writer: Web feathers
    Web feathers
  • Oct 6, 2021
  • 1 min read

9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தோ்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும்,

9ந்தேதியும் (சனிக்கிழமை) 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.


இன்று 9 மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட ஒன்றியங்களுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஒவ்வொரு வாக்காளர்களும் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கு நான்கு வாக்குகள் பதிவு செய்ய வேண்டும்.


இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்தில் அதிகமான மக்கள் வாக்குச்சாவடிகளில் குவிந்தனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குகளை பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


பதிவு: மாலை மலர்



Kommentare


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by Web feathers | வலை சிறகுகள். Proudly created with Wix.com

bottom of page