top of page

லக்கிம்பூர் செல்ல காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு காவல்துறை அனுமதி

  • Writer: Web feathers
    Web feathers
  • Oct 6, 2021
  • 1 min read

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தர்ணாவில் ஈடுபட்டதையடுத்து, லக்கிம்பூர் செல்ல அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தில் லக்கிம்பூர் கேரி என்னுமிடத்தில் சாலையில் முழக்கங்களை எழுப்பியபடி சென்ற விவசாயிகளின் மீது பின்புறமாகக் காரை ஏற்றி 4 விவசாயிகளின் படுகொலைக்குக் காரணமான இந்திய ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மற்றும் அவரது நண்பர்களைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


இந்த விபத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவிலியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்திக்க டெல்லியில் இருந்து லக்னோ சென்ற ராகுல்காந்திக்கு, லக்னோ விமான நிலையத்திலிருந்து வெளியே செல்வதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் அவர் லக்னோ விமான நிலையத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

உத்தரபிரதேச யோகி ஆதித்யநாத் அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தி, 'எந்த விதிகளின் அடிப்படையில் என்னை தடுத்து நிறுத்திகிறீர்கள்' என காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து இறுதியாக ராகுல்காந்தியை தனது வாகனத்தில் லக்கிம்பூர் கேஹ்ரிக்கு செல்ல காவல்துறை அனுமதியளித்தது.


பதிவு: புதிய தலைமுறை

 
 
 

Comentarios


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by Web feathers | வலை சிறகுகள். Proudly created with Wix.com

bottom of page