top of page

4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

  • Writer: Web feathers
    Web feathers
  • Oct 15, 2021
  • 1 min read

14வது ஐபிஎல் இறுதிப்போட்டியில் 4வது முறையாக கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ். கொல்கத்தா அணியை வீழ்த்தி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

14வது சீசன் ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று விளையாடியது. துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. கொல்கத்தா அணியில் மாற்றம் எதுவும் இல்லை. இதனால் ரஸ்செல் விளையாடவில்லை.

இதனையடுத்து சென்னை அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் 32 ரன்களில் வெளியேறினார். ராபின் 31 ரன்களில் ஆட்டமிழந்து உள்ளார். எனினும், தொடர்ந்து விளையாடிய பிளெஸ்சிஸ் அதிரடியாக அடித்து ஆடினார். அவர் அரை சதம் (86) பூர்த்தி செய்து ஆட்டமிழந்தனர். மொயீன் அலி 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி 192 ரன்கள் எடுத்து உள்ளது. இதனால், கொல்கத்தா அணிக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சுனில் நரேன் 2 விக்கெட்டுகளும், ஷிவம் மாவி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.


இதனை தொடர்ந்து களம் கண்ட கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். இதில் ஷுப்மன் கில் 51 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களும் குவித்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆனால் இவர்களுக்குப் பிறகு வந்தவர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் ஆட்டம் சென்னை அணிக்கு சாதகமாக மாறியது.

கொல்கத்தா அணியில் நிதிஷ் ரானா(0), சுனில் நரேன்(2), இயன் மார்கன்(4), தினேஷ் கார்த்திக்(9) என வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தன. இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஐ.பி.எல். 2021 இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி, சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்று பெற்றது.


இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதுவரை சென்னை அணி 3 முறையும், கொல்கத்தா அணி 2 முறையும் கோப்பைகளை வென்றுள்ளன.



Comments


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by Web feathers | வலை சிறகுகள். Proudly created with Wix.com

bottom of page